பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் கூட்டம் தொடக்கம் ! 3 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டம் ஜூன் 15-ம் தேதி அதாவது இன்று டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மத்திய அரசின் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஒரு பெரிய அளவிலான கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியுள்ளது.இதில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் .மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனெர்ஜி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் ஆகியோர் கலந்துகொல்லவில்லை.