பிரதமர் மோடி ஒரு திருடன் என்று மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா பதிவிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் கர்நாடக திரைத்துறையின் முன்னணி நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா ஆவார்.இதன் பின் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரம்யா கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2014ல் தோல்வியடைந்தார். தற்போது ரம்யா காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள செயல்பாடுகளை கவனித்து வருகிறார்.
ரம்யா தன்னுடைய ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தன் மெழுகு சிலை மீது தானே திருடன் என எழுதிக்கொள்வது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். இதனால் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையீது ரிஸ்வான் அளித்த புகாரின் பேரில் அம்மாநில போலீசார் ரம்யா மீது சட்டப்பிரிவு 67, சட்டப்பிரிவு 124-ஏவின் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரம்யா பதிவிட்டுள்ளார்.அதில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அந்த ட்வீட்டை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்? அடுத்த முறை வேண்டுமானால் மேலும் ஒரு ட்வீட்டை பதிவிடுகிறேன்.அதாவது இந்தியாவில் தேசதுரோக வழக்கு ரத்து செய்ய வேண்டும். இது மிகவும் மோசமானது. என் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தவர்களுக்காக இதை மீண்டும் சொல்கிறேன்.பிரதமர் மோடி ஒரு திருடன்(#PMChorHai ).
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…