ரூ.500000 வரை அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை …!சுமார் 50 கோடி குடும்பங்களுக்கான திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.
இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.மேலும் 15000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைத்து கொள்ள விண்ணப்பித்துள்ளது.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே முதல் அமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பிடு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு தொகையில் மத்திய அரசு 60 % மற்றும் தமிழக அரசு 40 % செலவையும் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஜார்கண்டை தொடர்ந்து பிற மாநிலங்களில் படிப்படியாக தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.