இந்தியா மிக உயர்ந்த ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது.! பிரதமர் மோடி பெருமிதம்.! 

PM Modi

இந்தியா மிக உயர்ந்த ஆழமான வரலாற்றை கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி  இன்று காலை அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர்க்கு வெள்ளை மாளிகையில் விருந்து நிகழ்ச்சி, ஐநா நடத்தும் யோகா சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொள்ள உள்ளார். மேலும், இந்த அமெரிக்க பயணத்தின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்தியாவில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்த பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கு முன்பு ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டியளிக்கையில், இந்தியா எந்த நாட்டையும் மாற்றும் நோக்கில் செயல்படவில்லை. நடுநிலை தன்மையோடு செயல்படுகிறது. இந்தியாவின் இந்த செயல்முறை உலக அரங்கில் இந்தியா அதன் சரியான இடத்தை பெற்றுள்ளது.

இந்தியா மிகவும் உயர்ந்த, ஆழமான மற்றும் பரந்த பண்பாட்டு விவரங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்திய தலைவர்களுக்கு இடையே இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு நம்பிக்கை இப்போது தொடர்ந்து வருகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்