நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு,ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில்,சிகிச்சை பலனின்றி காலமானார்.
புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால், ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதன்பின், புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தகவல் தெரிவித்த நிலையில்,அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து,அவரது மறைவிற்கு தமிழக முதல்வர்,மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“விதியின் ஒரு கொடூரமான திருப்பம், புனீத் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான மற்றும் திறமையான நடிகரை நம்மிடமிருந்து பறித்து விட்டது. இது இறப்பதற்கான வயது இல்லை. வரும் தலைமுறையினர் அவரது படைப்புகள் மற்றும் அற்புதமான ஆளுமைக்காக அவரை அன்புடன் நினைவுகூருவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி”,என்று தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…