135 பேர் இறந்ததற்கு வருத்தப்படாத பிரதமர் மோடி.? திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்.!
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட் மூலம் காயம் அடைந்துள்ளார். ஆனால் மோர்பி பாலம் இடிந்த சம்பவத்தில் 135 பேர் இறந்ததால் அவருக்கு வருத்தமில்லை. – திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே.
மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் கைது 2 முறை கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கை குறித்து, சாகேத் கோகலே கூறுகையில்,’ பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட் மூலம் காயம் அடைந்துள்ளார். ஆனால் மோர்பி பாலம் இடிந்த சம்பவத்தில் 135 பேர் இறந்ததால் அவருக்கு வருத்தமில்லை. இன்று வரை, மோர்பி பாலத்தை கட்டிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஒரு எஃப்ஐஆரில் கூட பதிவு செய்து கைது செய்யப்பட வில்லை.’ என்று ஜாமீனில் வெளிவந்த அவர் டிவீட் மூலம் பதிவு செய்துள்ளார்.