டெல்லி:இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி இன்று இடமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக,பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும் இவ்வேளையில்,கிரானைட் கற்களால் ஆன அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இது அவருக்கு இந்தியாவின் கடனாளியின் அடையாளமாக இருக்கும்.
நேதாஜி அவர்களின் பிரமாண்ட சிலை கட்டி முடிக்கப்படும் வரை,அவரது ஹாலோகிராம் சிலை அதே இடத்தில் இருக்கும்.நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23 ஆம் தேதி ஹாலோகிராம் சிலையை திறந்து வைப்பேன்”,என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…