நடிகர் இர்பான் கான் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இரண்டு துறைகளிலும் மிகவும் பிரபலமான நடிகர் இர்பான் கான்.இவருக்கு ஏற்பட்ட பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அந்த மருத்துவமனையில்,அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இர்பானின் மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இர்பானின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் பதிவிட்ட பதிவில், இர்பான் கானின் மறைவு சினிமா உலகிற்கு ஒரு இழப்பாகும். வெவ்வேறு பிரிவுகளில் அவர் செய்த நடிப்பால் நினைவுகூரப்படுவார்.அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…