பெங்களூருவில் இருந்து டெல்லி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

PMModi in Delhi

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு 4 நாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி திரும்பினார். தென்னாப்பிரிக்கா, கிரீஸ் பயணங்களை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் விஞ்ஞானிகள் சந்தித்துள்ளார். பிரதமர் மோடி சந்திராயன் -3  திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை இஸ்ரோ மையத்திற்கு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பெங்களூரு வந்தார்.

பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார். பின் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் சந்திராயன்-3 எடுத்த புகைபபடங்களை பரிசாக வழங்கினர். அதன்பின், பேசிய அவர் நிலவில் சந்திராயன் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவ சக்தி’ என பெயரிட்டு அழைக்கப்பட உள்ளது. இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதியப்பட்டுள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து, நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். பழங்கால இந்திய நூல்களில் குறிப்பிட்டுள்ள விண்வெளி தத்துவங்களை இளைய தலைமுறைக்கு காட்ட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

மேலும், சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு ‘திரங்கா’ (மூவர்ணக்கொடி) என பெயரிடப்பட்டுள்ளது. எந்த தோல்வியும் நமக்கு இறுதியானது அல்ல என்பதை நினைப்பூட்டும் வண்ணம் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி 20 கலாச்சார உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. அந்த உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு 4 நாள் பயணம் சென்று, மீண்டும் இந்தியா வந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணம் முடிந்து டெல்லி திரும்பியுள்ளார். பாலம் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் கட்சியினர் வரவேற்றனர். டெல்லி திரும்பிய பிரதமர் மோடி நூற்றுக்கணக்கான மக்களுடன் சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாடினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்