பிரதமர் மோடியின் சகோதரருக்கு உடல்நல பாதிப்பு.! சென்னை அப்பல்லோவில் தீவிர சிகிச்சை…
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி என்பவர் உடல்நலகுறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.