நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவி ட்விட் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். இன்று அதிகாலை 2.11 மணிக்கு மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்து ட்விட் செய்துள்ளனர். அந்த ட்வீட்டில், ‘பிட்காயினுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. அரசு அதிகாரப்பூர்வமாக 500 BTC ஐ வாங்கி நாட்டின் அனைத்து மக்களுக்கும் விநியோகித்து வருகிறது. என்று பதிவிட்டு லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.
இதனால் பலர் குழப்பம் அடைந்தனர். பின்னர் தான் தெரியவந்தது பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று, இதைத்தொடர்ந்து, இரண்டு நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டது. அடுத்த சிறிது நேரத்தில் மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமரின் அலுவலக அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. ட்விட்டர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது. ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் பதிவிட்ட பதிவுகளை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…