கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரதமர் மோடியின் பேச்சு முதலிடம்.!
உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடிகள் போராடி வருகின்றனர். சீனாவில் தொடங்கிய வைரஸ் இத்தாலியை கொன்று குவிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் பலியாகி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் முதல் முறையாக கொரோனா குறித்து கடந்த 20ம் தேதி பேசிய பிரதமர், 22ம் தேதியில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தினார். இதையடுத்து கடந்த 24ம் தேதி திரும்ப பேசிய மோடி, நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என அறிவித்தார். இதில், 20ம் தேதியன்று பிரதமர் மோடி பேசியதை டிவி சேனல்களில் பார்த்தவர்களை விட, 24ம் தேதி பேசியதை அதிகம் பேர் பார்த்துள்ளனர். இதுபோல் கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி மோடியின் பேச்சை விட, 24ம் தேதி மோடி பேசியதைத் தான், அதிகம் பேர் பார்த்து உள்ளனர்.
பிரதமரின் இந்தப் பேச்சை 19.7 கோடிக்கும் அதிகமான மக்கள், 191 சேனல்களில் பார்த்ததாக பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி சசி சேகர் தெரிவித்தார். ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை 13.3 கோடி பேர் பார்த்துள்ளனர். அதை விட பிரதமர் மோடி பேசியதை, அதிக மக்கள் பார்த்துள்ளனர். கடந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றி டிவியில் பிரதமர் பேசியதை 6.5 லட்சம் பேர், 163 சேனல்களில் பார்த்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் அறிவித்ததை 5.7 கோடி பேர், 114 சேனல்களில் பார்த்துள்ளனர்.