மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு – எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு..!

Default Image

இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் பேசப்பட்டு வருகிறது என மக்களவையில் பிரதமர் மோடி உரை. 

பிரதமர் மோடி அவர்கள், நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடி உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வந்த நிலையில், அதானி குழும விவகாரம்- நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பிரதமர் மோடி உரை 

pm modi

பிரதமர் மோடி பேசுகையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர். நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஜனாதிபதியின் உரை வழிகாட்டியாக இருக்கிறது.தொலைநோக்கு சிந்தனையுடனான உரையை ஜனாதிபதி வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு புரிதல் திறன் குறைவாக உள்ளது என்பதை காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் தங்களது மனதில் உள்ளதை தான் செயலாக வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சி உலகளவில் பேசப்பட்டு வருகிறது. ஊழலற்ற இந்தியா தற்போது உருவாகி வருகிறது.

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் குடியரசு தலைவரை அவமானம் செய்தார்; காங்கிரஸ் கட்சியினர் செய்த வினை அவர்களை சுடும். தற்போது பல்வேறு நாடுகளில் பொருளாதார சிக்கல், வேலையின்மை நிலவுகிறது. கொரோனா போன்ற நெருக்கடி காலங்களிலும் நாட்டை சிறப்பாக வழிநடத்தினோம்.

நாடாளுமன்றத்தில் ராகுலின் பேச்சால், அவர்களது ஆதரவாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். மேலும், குடியரசு தலைவர் உரையில் உள்ள முக்கிய அம்சங்களை யாரும் எதிர்க்கவில்லை. இந்தியா ஊழலற்ற நாடாக தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது.

இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. டிஜிட்டல் முறையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது. டிஜிட்டல் இந்தியாவை சர்வதேச நாடுகள் ஆச்சரியத்துடன் காண்கின்றன. இந்தியா உற்பத்தி நாடாக மாறிக்கொண்டிருப்பதை உலக நாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

Corona Virus Update 3

உலகில், இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. பெருந்தொற்று போன்ற அனைத்தையும்  தாண்டி நம் நாடு முன்னேறி வருகிறது. கொரோனா காலத்தில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி இந்தியா சாதித்தது. உலகளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளச்சியடைந்துள்ளது. விலைவாசி குறைந்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த தீவிரவாதமும் நடைபெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம்.

தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியால் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் முதல் காஷ்மீர் வரை எந்த ஒரு நக்சல் நடவடிக்கையும் கிடையாது என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்