OLX-இல் விற்பனைக்கு வந்த பிரதமர் மோடி அலுவலகம் – 4 பேரை கைது செய்த காவல்துறை.!

Default Image

பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை ரூ.7.5 கோடிக்கு விற்க ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் செய்த 4 பேர் கைது.

வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தை விற்பனை செய்வது தொடர்பான ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் குறித்து புகார் வந்தபோது வாரணாசியில் உள்ள காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. சில குற்றவாளிகள் ஆன்லைன் சந்தையான OLX-இல் ரூ.7.5 கோடிக்கு அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பி.எம்.ஓ அலுவலகம் குருதம் காலனியில் அமைந்துள்ளது.

இதையடுத்து, லக்ஷ்மிகாந்த் ஓஜா என்று அடையாளம் காட்டிய நபரின் ஐடியிலிருந்து விளம்பரம் பகிரப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இந்த விளம்பரம் உடனடியாக அகற்றப்பட்டதாகவும், தற்போது இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வாரணாசி எஸ்எஸ்பி அமித் குமார் பதக் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை விளம்பரத்திற்காக புகைப்படத்தை கிளிக் செய்த நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும், ஹவுஸ் & வில்லா என்ற பிரிவின் கீழ் விளம்பர எண் ஐடி 1612346492 ஓஎல்எக்ஸில் வெளியிடப்பட்டதாகவும், குளியலறையுடன் நான்கு படுக்கையறைகள் தயாராக உள்ளது என்று பட்டியலிடப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது 6500 சதுர அடி பரப்பளவு, 2 மாடி கட்டடம் மற்றும் கார் நிறுத்துமிடம் போன்ற விவரங்களைக் கொண்டிருந்தது. இதன் ‘பி.எம்.ஓ அலுவலகம் வாரணாசி’ என கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review