பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம்!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம். தாயாருக்கு கண்கலங்க பிரதமர் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (வயது 100) உடல்நல குறைவால் அகமதாபாத்தில் இன்று காலை காலமானார். குஜராத்தின் காந்திநகருக்கு சென்ற பிரதமர் மோடி அவரது தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்னர் தாயார் உடலை தோளில் சுமந்து சென்றதுடன் இறுதி சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு குடியரசு தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்