பிரதமர் மோடியின் தாமதமான முடிவு பலரது உயிரை வாங்கி விட்டது…! – மம்தா
- தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு.
- பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கி விட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று மக்களிடம் உரையாற்றினார்.மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இவரது அறிவிப்பிற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் முதல் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் நான்கு மாதங்களாக செய்யப்படவில்லை. மிகுந்த அழுத்தத்திற்கு பின் மாநில அரசும் பேச்சை கேட்டுக் கேட்டு உள்ளார்.
இதனை அமல்படுத்த பிரதமர் மோடிக்கு நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். கொரோனா பரவிய காலம் முதலே மக்களின் நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கி விட்டது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
The well-being of the people of India should’ve been prioritized since the very start of this pandemic. Unfortunately, this delayed decision by PM has already cost many lives.
Hoping for a better managed #VaccinationDrive this time that focuses on people & not propaganda! (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 7, 2021