#BREAKING: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழா.. உச்சநீதிமன்றம் அதிருப்தி..!
புதிய நாடாளுமன்றம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளையும், விளக்கங்களையும் உச்சநீதிமன்றம் கேட்டு பெற்றுக்கொண்டது. அதில், புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பித்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் கட்டுமான பணிகளை எப்படி தொடங்கி தொடங்குவீர்கள் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது..? என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இதனையடுத்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், மத்திய சொலிசிட்டர் ஜெனரலும் கட்டுமான பணிகள் நடக்கவில்லை உறுதிப்படுத்துங்கள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வரும் 10-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில் இந்த அதிருப்தியை உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.