Foreign visit of PM Modi [file image]
புதுடெல்லி : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே செல்கிறார்.
இதன்மூலம் புரூனே செல்லும் முதல் இந்தியத் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுகிறார். புருனே பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார், புருனேயுடனான உறவுகள் குறித்து பிரதமர் மோடி கலந்தாலோசிக்கவுள்ளார்.
புருனே பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் செல்கிறார். ஆம், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் மோடி செப்டம்பர் 4-5 தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார்.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூரருக்கு செல்லும் பிரதமர் மோடி, இந்த பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்து உரையாடவுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வரும் தொழில் அதிபர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசுவார் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அடுத்த இரண்டு நாட்களில், புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குச் செல்கிறேன். இந்த நாடுகளின் பல்வேறு ஈடுபாடுகளின் போது, அவர்களுடன் இந்தியாவின் உறவுகளை மேலும் விரிவு செய்ய கவனம் செலுத்தப்படும்.
இந்தியா-புருனே தருஸ்ஸலாம் இரு நாட்டு உறவுகள் 40 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. மகத்தான அதிபர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…