பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்… இன்று புருனே., அடுத்து சிங்கப்பூர்.!

புருனே, சிங்கப்பூர் நாடுகளுக்கு 3 நாள் பயணமாக பிரதமர் மோடி, இன்று காலை புதுடெல்லியில் இருந்து புறப்பட்டார்.

Foreign visit of PM Modi

புதுடெல்லி : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே செல்கிறார்.

இதன்மூலம் புரூனே செல்லும் முதல் இந்தியத் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுகிறார். புருனே பயணத்தின் போது, ​​வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார், புருனேயுடனான உறவுகள் குறித்து பிரதமர் மோடி கலந்தாலோசிக்கவுள்ளார்.

புருனே பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் செல்கிறார். ஆம், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் மோடி செப்டம்பர் 4-5 தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார்.

ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூரருக்கு செல்லும் பிரதமர் மோடி, இந்த பயணத்தின் போது, ​​அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்து உரையாடவுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வரும் தொழில் அதிபர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசுவார் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அடுத்த இரண்டு நாட்களில், புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குச் செல்கிறேன். இந்த நாடுகளின் பல்வேறு ஈடுபாடுகளின் போது, ​​அவர்களுடன் இந்தியாவின் உறவுகளை மேலும் விரிவு செய்ய கவனம் செலுத்தப்படும்.

இந்தியா-புருனே தருஸ்ஸலாம் இரு நாட்டு உறவுகள் 40 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. மகத்தான அதிபர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்