கும்பமேளாவை அதிக பக்தர்களின்றி முடித்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி கோரிக்கை…!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிரை காப்பாற்றுவது புனிதமானது நெறிமுறைகளை பின்பற்றி பெருமளவில் புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட கூடிய கும்பமேளா பண்டிகையானது நடைபெற்று வருகிறது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் கங்கை நதியில் நீராடி பக்தர்களுக்கும் ,சாதுக்களுக்கும் தொடர்ந்து கொள்வதற்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி வரை கும்பமேளா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும், சாதுகளுக்கும் பரவி வருவதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சுவாமி அவ்தேஷானந்த் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசுகையில், ‘கும்பமேளா இப்போது கொரோனாவுக்கு எதிரான போரில் வழிப்படுத்தும் குறியீடாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், பக்தர்களுக்கும், சாதுக்களுக்கு தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அதிக அளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சுவாமி அவ்தேஷானந்த், ‘பிரதமர் மோடியின் வேண்டுகோளை நாங்கள் மதிக்கிறோம். உயிரை காப்பாற்றுவது புனிதமானது நெறிமுறைகளை பின்பற்றி பெருமளவில் புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025