நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் பிரதமர் தான் எனவும், அமெரிக்க அதிபரின் முடிவை விட பிரதமர் மோடியின் முடிவு மிக மோசமானதாக இருக்கும் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் தங்கள் பிரச்சாரங்களை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் விறுவிறுப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தின் முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அவர்கள் இன்று ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி குறித்து விமர்சித்துள்ளார். அதாவது பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொய்களையும் வெறுப்புணர்வுகளையும் தான் நாடு முழுவதும் பரப்பி வருகிறார்கள் என தெரிவித்துள்ள அவர், இந்த நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் பிரதமர் மோடி தான் என தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நேர்ந்ததை விட பிரதமர் மோடியின் முடிவு மோசமானதாக இருக்கும் எனவும், வன்முறையால் எந்த பலனையும் பெற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை: வடகிழக்கு பருவமழைக் காலத்தில், அடிக்கடி பரவும் நோய்கள், குறிப்பாக டெங்கு, வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தவிர்க்க முடியாத…
பெங்களூர் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படம் வரும் நவம்பர்…