கொரோனா தொற்றின் நிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

Default Image

நாடு முழுவதிலும் உள்ள  கொரோனா தொற்றின் சூழ்நிலை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகிவற்றை குறித்து பரிசீலனை செய்வதற்காக பிரதமர் மோடி ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார்.

கொரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று தொடர்பாக மனித வள நிலைமை மற்றும் அதை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் இன்று காலை ஒன்பதரை மணியளவில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்தும் ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை அதிகரித்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கான மத்திய அரசின் அனுமதி குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தற்பொழுது நடந்துவரும் கூட்டத்தில் டெல்லியின் பாத்ரா மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் இல்லாமல் இறந்த 12 பேரில் ஒரு மருத்துவரும் உயிரிழந்தது மற்றும் தனியார் மருத்துவமனையில் வசிக்கக்கூடிய மருத்துவர்கள் கடுமையான மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டது குறித்து பேச பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவில் இரண்டாம் நிலை காரணமாக மருத்துவமனை வசதிகள் மற்றும் தகனம் செய்ய கூடிய சவக்கிடங்குகள் ஆகியவற்றிற்கும் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதுடன் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக் குறையும் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்