கொரோனாவை விரட்ட பிரதமர் மோடியின் 10 முக்கிய அம்சங்கள்.!
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி காணொளிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு 10 முக்கிய அம்சங்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 10 முக்கிய அம்சங்கள் :
- நாடு முழுவதும் இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு. கொரோனாவை விரட்ட அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- நீடிக்கப்பட்ட ஊரடங்கு காலகட்டத்திற்கான புதிய வழிமுறைகள் நாளை வெளியிடப்படும்.
- ஏப்ரல் 20 ஆம் தேதிவரை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக இருக்கும். பின்னர் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும்.
- அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும்போது தனிமனித இடைவெளி அவசியம். மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
- கொரோனாவை கண்டறிய Aarogya Setu என்ற செயலியை பயன்படுத்த வேண்டும்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைப்பின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்திய சிறந்து விளங்குகிறது.
- ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும், தொழிலாளர்களுக்கு கூடுதல் உதவி அளிக்க வேண்டும்.
- ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நிறுவனங்கள் நீக்க வேண்டாம்.
- வீட்டில் உள்ள முதியோர்களின் நலனில் கூடுதல் கவனம் தேவை. மேலும் கொரோனவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.