இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து.!

Default Image

அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் நாட்டில் இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000 படங்களுக்கும் மேல் 7000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார் ராஜா.

இன்று இளையராஜா தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜா இன்று 80-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், தொலைபேசி மூலம் பிரதமர் மோடி தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்