இன்று ஜம்மு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி..!
ஜம்முவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி காலை 11:30 மணியளவில் ஜம்முவில் உள்ள ஆசாத் மைதானத்தில் ரூ.32,000 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஐஐடி ஜம்மு ஐஐடி, பிலாய், ஐஐடி திருப்பதி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். ஜம்மு காஷ்மீரில் சாலை, ரயில் இணைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல ஜம்மு விமான நிலைய புதிய முனையம் கட்டடம், பெட்ரோலிய பொதுபயன்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஜம்மு-காஷ்மீரில் புதிதாக பணியில் சேர்ந்த 1,500 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து, “விக்சித் பாரத் விக்சித் ஜம்மு” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து மக்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2019 ஆண்டு முதல் 2-வது முறையாக ஜம்மு செல்கிறார். முதல் முறையாக கடந்த 2022 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வருகை தந்தார். அதன் பிறகு இன்று 2-வது முறையாக ஜம்முவிற்கு பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு ‘சிறப்பு அந்தஸ்து’ வழங்கிய சட்டப்பிரிவு 370, ஆகஸ்ட் 2019 ரத்து செய்யப்பட்டது.
இதனால் ஒரு முழு மாநிலமாக இருந்த ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டும் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.