அமெரிக்காவைத் தொடர்ந்து எகிப்தில் சுற்று பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
அமெரிக்க பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, வரும் 24, 25 ஆம் தேதி வரை எகிப்தில் சுற்று பயணம்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு முதல்முறையாக அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளுகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். ஜூன் 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில்பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்.
அமெரிக்க பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, வரும் 24, 25 ஆம் தேதி வரை எகிப்தில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடி எகிப்து நாட்டின் உயர்மறட்ட தலைவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின் எகிப்தில் உள்ள இந்திய வம்சாவளியினரிடம் கலந்துரையாடுகிறார்.