ரத்தசோகை நோய் ஒழிப்பு இயக்கத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
தேசிய அரிவாள் செல் ரத்த சோகை நோய் ஒழிப்பு இயக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள மத்தியப் பிரதேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் செல்கிறார். அப்போது, தேசிய அரிவாள் செல் ரத்தசோகை நோய் ஒழிப்பு இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதன்பின் அரிவாள் செல் ரத்தசோகை தொடர்பான அட்டைகளையும் விநியோகிக்கிறார்.
குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, அசாம், உத்தரப் பிரதேசம், கேரளா, பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 17 மாநிலங்களின் 278 மாவட்டங்களில் அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு இயக்கம் செயல்படும் என்றும் இந்தியாவில் அரிவாள் செல் ரத்தசோகை நோய் 2047ம் ஆண்டுக்குள் ஒழிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், அரிவாள் செல் ரத்தசோகை நோயால், குறிப்பாக பழங்குடியின மக்களிடையே ஏற்படும் அழுத்தமான சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த பணியின் நோக்கமாகும் என்றுள்ளனர். தேசிய அரிவாள் செல் இரத்த சோகை ஒழிப்பு இயக்கம் 2023 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேலும், மத்திய பிரதேசத்தில் 3.57 கோடி பேருக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அட்டையும் பிரதமர் மோடி வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.