நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை… கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி.!

PM Modi

வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 10 வரை  NDA கூட்டணி கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6-7 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை பிரதான கட்சிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்த கூட்டம் பற்றி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அதேபோல் பாஜக தரப்பில் இருந்தும் கடந்த 18ஆம் தேதி டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதனை அடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேர்தல் வியூகம், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பானது வருகிற ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேதிகளின் மாநில வாரியாக பிரதமர் மோடி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியில் உள்ள அதிமுக, தாமாக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சி தலைவர்களை வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி பிரதமர் மோடி சந்திப்பார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்