14,300 கோடி.! புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நாளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.!
அசாம் மாநிலத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.
அசாம் மாநிலம் கௌகாத்திக்கு பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு பல்வேறு மக்கள் நல நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக நாளை 11 ஆயிரம் நடன கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
14,300 கோடி ரூபாய் :
நாளை ஏப்ரல் 14 அன்று, கௌஹாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். சுமார் 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் இந்த எய்ம்ஸ் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவமனை கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
புதிய பாலம் – புதிய மருத்துவமனை :
மேலும், அசாம் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெ்ட் நிறுவனத்தின், மெத்தனால் ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அடுத்ததாக, பிரம்மபுத்திரா ஆற்றின் மீது புதியதாக கட்டப்பட்டுள்ள பாலம். (இந்த பாலம் , பாலஷ்புரி- சுவல்குச்சி பகுதியினை இணைக்கும் வண்ணம் உள்ளது. ) மற்றும் ஐ.ஐ,டி. கவுஹாத்தியில் அதிநவீன மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நல திட்டங்ளையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.