முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
ராஜஸ்தானில் அறிமுகமாக இருக்கும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி கான்ட் இடையே இயக்கப்படும். மேலும், இதன் வழக்கமான சேவை ஏப்ரல் 13 (அதாவது) நாளை முதல் தொடங்க இருக்கிறது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் – டெல்லி கண்டோன்மெண்ட் இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீரில் இருந்து டெல்லிக்கு 5 மணி 15 நிமிடத்தில் இந்த ரயில் சென்றடையும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் பயண நேரத்தில் 1 மணி நேரம் சேமிக்கப்படும் என தெரிகிறது. புஷ்கர் மற்றும் அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளிட்ட ராஜஸ்தானில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கான இணைப்பை இந்த ரயில் பூர்த்தி செய்யும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அரை-அதிவேக மற்றும் சுயமாக இயக்கப்படும் ரயில் பெட்டியாகும். இந்த ரயில் அதிநவீன பயணிகள் வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது, பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது.