இன்று நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..!

நாட்டின் முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவையை கேரளாவின் கொச்சி நகரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று கேரளாவுக்கு வருகை புரிந்தார். இந்த நிலையில், இன்று நாட்டில் முதல் முறையாக கொச்சியில் நீர்வழி மெட்ரோ சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் கேரளாவின் துறைமுக நகரான கொச்சியில் 2021 பிப்ரவரியில் ரூ.1,137 கோடியில் நீர்வழி மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டது.
முதல் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சேவை
ஒவ்வொரு படகிலும் 50 இருக்கைகள் உள்ள நிலையில், ஒரு படகில் 100 பயணிகள் செல்ல முடியும். குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.