இந்தியாவின் மிக நீளமான ‘அடல் சேது’ பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர்.!

Atal Setu MODI

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு, அடல் சேது என பெயரிடப்பட்டுள்ள, பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும், ரூ.30,500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவில் தொடங்கி வைக்கிறார்.

அதில், ரூ.17,840 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் மிக நீண்ட கடல் பாலம் ‘அடல் சேது’. அடல் சேது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் நாட்டின் மிக நீளமான கடல் பாலம் ஆகும். 2016 டிசம்பரில் பாலத்தின் அடிக்கல்லும் பிரதமரால் நாட்டப்பட்டது.

இது சுமார் 21.8 கிமீ நீளம் கொண்ட 6 வழி பாலம் கடலில் சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமும் கொண்டது. இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும் மற்றும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கு பயண நேரத்தை குறைக்கும்.

மும்பையில் இருந்து நவி மும்பைக்கான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறையும் என்று கூறப்படுகிறது. இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையே இணைப்பை மேம்படுத்த உதவுகிறது. இந்த பாலத்தின் திறப்பு விழா இன்று பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறுகிறது.

வியாபாரத்தை விட தேசப்பற்று முக்கியம்.! மாலத்தீவை ஓரம்கட்டிய EaseMyTrip.!

மேலும், இந்த பாலத்தில் பயணிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மும்பை நோக்கி செல்லும் மோட்டார் சைக்கிள்கள், மோப்கள், 3-வீலர் டெம்போ, ஆட்டோ ரிக்‌ஷாக்கள், டிராக்டர்கள், டிராக்டர்கள் ஏற்றப்படாத டிராலிகள், விலங்குகள் இழுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் கிழக்கு நெடுஞ்சாலையில் நுழைய முடியாது. இந்த வாகனங்கள் மும்பை போர்ட்-செவ்ரி வெளியேறும் பாதையை (வெளியேறு 1C) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இளைஞர் ஐகான் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு அவர் தேசத்தின் இளைஞர்களிடையே உரையாற்றுவார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்