கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

Vande Bharat train

கோவாவின் முதல் வந்தே பாரத் ரயிலை மட்கான் ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:45 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் அந்த ரயில் சுமார் மாலை 6:30 மணிக்கு மும்பையை வந்தடையும்.

மட்கான் ரயில் நிலையத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மும்பை-கோவா இடையே வழக்கமான ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்த ரயில் வெள்ளிக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் இந்தியாவின் 19 வது அரை-அதிவேக வந்தே பாரத் ரயிலைக் குறிக்கிறது. மும்பையிலிருந்து இயக்கப்படும் நான்காவது மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து இயக்கப்படும் ஐந்தாவது ரயிலாகும்.

முன்னதாக, மே 29 அன்று, பிரதமர் மோடி காணொளி மூலம் அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய சேவையானது குவஹாத்தி மற்றும் நியூ ஜல்பைகுரி இடையேயான 411 கிமீ தூரத்தை 5 மணி 30 நிமிடங்களில் கடக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்