“பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தான் தேசிய கொடியை ஏற்றுவார்” – மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun kharge

நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பிரதமர் உரையில் மணிப்பூர் வன்முறை, பாஜக அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவரது உரையில், 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலகப் பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இந்தியா இருந்தது. இன்று 140 கோடி இந்தியர்களின் முயற்சியால் 5வது இடத்திற்கு வந்துவிட்டோம்.

நாட்டின் ஊழலை தடுத்து வலுவான பொருளாதாரத்தை உருவாக்கியுள்ளோம். வரும் 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற நிலையை அடைய ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என்றும் எங்களுக்கு வாக்களித்தால் சீர்திருத்தத்திற்காக உழைப்போம்.  சர்வதேச அளவில் இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கி வருகிறது. நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் ஆவர். நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் உறுதியான அரசை எதிர்பார்க்கின்றனர்.

அதன்படி, கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வலுவான மற்றும் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுத்திருந்தனர். இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக விளங்கிய ஊழல் என்ற அரக்கனை அழித்தோம். மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை வீணாக்காமல் உங்களுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வந்து உள்ளோம்.

இதனால் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மீண்டும் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் சுதந்திர தின விழாவில் உரையாற்றும்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை பட்டியலிட உள்ளேன் என கூறினார். இந்த நிலையில், 2024-ம் ஆண்டில் மீண்டும் செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவேன் என இப்போதே பிரதமர் மோடி கூறியிருப்பது ஆவணத்தை காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிரதமர் மோடி அடுத்த ஆண்டும் தேசிய கொடியை ஏற்றுவார், ஆனால் அதை அவரது வீட்டில் ஏற்றுவார் என விமர்சித்தார். ஒவ்வொரு நபரும் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மீண்டும் வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் வெற்றி பெற வைப்பது, தோல்வி அடைய செய்வது மக்கள் கையில் உள்ளது. சுதந்திர தினத்தன்று கூட எதிர்க்கட்சிகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல. அவர் எப்படி நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்