ஒருநாள் பயணமாக வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி!

PM Modi francebstil

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் நிலையில், அங்கிருந்து திரும்பும் வழியில் பிரதமர் மோடி, 1 நாள் பயணமாக வரும் 25ம் தேதி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ்க்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிசை சந்தித்து பேசுகிறார் மோடி.

இந்த சந்திப்பில், வர்த்தகம் மற்றும் முதலீடு, கப்பல் போக்குவரத்து, இடம்பெயர்வு, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. ஐரோப்பாவில் இந்தியா முதலீடு செய்ய உள்ள நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கிரீஸ் ஐரோப்பாவிற்கு இந்தியாவின் நுழைவாயிலாக வெளிவர விரும்புகிறது. இந்திய முதலீட்டாளர்கள் நுழைவாயிலைத் தொடங்குவதற்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் தளவாட மையங்களை உள்ளடக்கிய விரிவான தனியார்மயமாக்கல் திட்டத்தை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அந்நாட்டு அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்