பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு திடீரென சென்றது, அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை டெல்லியில் உள்ள ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு திடீரென சென்று, அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார். குருத்வாராவுக்கு பிரதமர் மோடி ஆரஞ்சுத் துணியால் தலையை மறைத்து பிரகாசமான மஞ்சள் குர்தாவுடன் இடுப்பு கோட் அணிந்து சீக்கிய முறைப்படி வருகை தந்தார். மேலும், எந்த ஒரு அறிவிப்புமின்றி வருகை தந்தது அங்குள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
குரு தேஜ் பகதூரை வழிபட்ட பின், சீக்கிய மதகுருக்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டார். வழிபாட்டினை முடித்தபின் குருத்வாராவிலிருந்து வெளியே வந்தபோது அங்கிருந்த மக்கள், பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதுகுறித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…