இந்திய மண்ணில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்ற பிரதமர் மோடி.!
- சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , அவருடைய மனைவி மெலனியா இருவரும் அஹமதாபாத் நிலையம் வந்தடைந்தார்.
- பிரதமர் மோடி அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார்.
இந்தியாவிற்கு முதல் முறையாக 2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று , நாளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நேற்று இரவு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , அவருடைய மனைவி மெலனியா இருவரும் அஹமதாபாத் நிலையம் வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி காத்திருந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் வந்ததுடன் மோடி கட்டித் தழுவி வரவேற்றார்.