‘சமூக விலகல்’ நடவடிக்கை: மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்.!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பேசிய மோடி, கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் அடுத்த நான்கு வாரங்களில் மிகவும் முக்கியமான நடவடிக்கை ‘சமூக விலகல்’ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த நடவடிக்கை பின்பற்றப்படுவதை மாநில முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து வரும் 22ம் தேதி கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கை பின்பற்றுமாறும் தெரிவித்துள்ளார்.