விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி மெட்ரோவில் பயணம்.!
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டிக்கெட் எடுத்துக் கொண்டு மெட்ரோ ரயிலில் பயணிகளில் ஒருவராக பயணித்தார்.
டெல்லி பல்கலைக்கழக விழாவில் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
#WATCH | Prime Minister Narendra Modi travels by metro to attend centenary celebrations of Delhi University. pic.twitter.com/HOZ6Kb1fjM
— ANI (@ANI) June 30, 2023
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவுக்குச் செல்லும் போது, பிரதமர் தனது சக பயணிகளுடன் உரையாடினார்.