இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழாவான இன்று பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்திய விமானப்படையின் ஆண்டு விழா,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இன்று இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“விமானப்படை தினத்தில் நமது விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். இந்திய விமானப்படை என்றால் தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு ஒத்ததாகும். அவர்கள் நாட்டைப் பாதுகாப்பதிலும், சவால்களின் போது தங்கள் மனிதாபிமான உணர்வின் மூலமும் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர்”,என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல,நாட்டின் குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“அனைத்து இந்திய விமானப்படை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விமானப்படையின் 89 வது ஆண்டு நிறைவுக்கு அன்பான வாழ்த்துக்கள். பலவிதமான சவால்களுக்கு மத்தியில் நாட்டை அமைதியுடனும் நெகிழ்ச்சியுடனும் வைத்ததற்காகவும், தேசத்திற்கான சேவையில் உறுதியாக இருப்பதற்காகவும் நமது விமானப்படை வீரர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…