உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக இன்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் இன்று காலை முதல் தாக்கல் நடத்தி வருகிறது. சற்று நேரத்திற்கு முன் பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர்.
இதற்கிடையில், போரை நிறுத்த இந்திய பிரதமர் தலையிடுவதற்காக காத்திருப்பதாகவும், ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சை கேட்பார் என்று தெரியவில்லை. ஆனால் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடனும் பேச முடியும், உக்ரைன் அதிபருடனும் பேச முடியும். வரலாற்றில் பலமுறை அமைதியை ஏற்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புகிறேன் என்று இந்தியாவிற்கு உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக இன்று இரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…