#BREAKING: ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு – பிரதமர் அறிவிப்பு ..!

Default Image

ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சற்று நேரத்திற்கு முன் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் தனது உரையை தொடங்கினார். உலகின் பல நாடுகளில் ஓமைக்ரான் பரவி வருகிறது. இந்தியாவில் பலருக்கும் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவதை மறந்துவிடக்கூடாது ஓமைக்ரான் பரவலைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • தடுப்பூசிதான் கொரோனா பரவல் தடுப்பதற்கான பேராயுதம்.
  • 5 லட்சம் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
  • நாடு முழுவதும் 18 லட்சம் தனிமைப்படுத்துதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
  • 90,000 குழந்தைகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
  • உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
  • வரும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும். 
  • முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
  • நாடு முழுவதும் இதுவரை 141 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • 18 வயது நிரம்பிய 90% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  • இதுவரை 60% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளன.
  • 3,000 க்கும் மேற்பட்ட PSA ஆக்ஸிஜன் ஆலைகள் உள்ளன.
  • 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
  • அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடியுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi