இத்தாலி பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 40,14,311 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 2,76,237 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டதில் 13,85,581 பேர் குணமடைந்துள்ளார்கள். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 48,699 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இத்தாலி 3-ஆம் இடத்தில் உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,201 ஆகும்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,185 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,168 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகில் உள்ள பல நாட்டின் தலைவர்களுடன் பேசிவருகிறார்.இந்நிலையில் பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் கியூசெப்-வுடன் தொலைபேசியில் கொரோனா தடுப்பு குறித்து கலந்துரையாடியுள்ளார்.இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாக தெரிவித்தார் பிரதமர் மோடி.இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662- ஆக உயர்ந்துள்ளது உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…