டெல்லியில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தமிழ் மொழி பெருமைகள் பற்றி பேசினார்.
இன்று (ஏப்ரல் 14) சித்திரை 1 தினமானது தமிழ் புத்தாண்டு தினமாக தமிழ் மக்களால் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவுக்கு பிரதமர் மோடி உட்பட பலர் வந்திருந்தனர்.
பராம்பரிய உடையில் பிரதமர் :
பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார். அதேபோல ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் கல்வெட்டுகள் :
இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி உலகின் மிக பழமையான மொழி தமிழ் மொழி என குறிப்பிட்டு பேசினார். மேலும், இந்தியா உலகின் பழமையான ஜனநாயகம் மட்டுமல்ல ஜனநாயகத்தின் தாய் நம் நாடு தான். இதற்கு பல்வேறு வரலாற்று குறிப்புகள் உள்ளன எனவும், இது பற்றிய முக்கியமான குறிப்பு தமிழகத்தில் கிடைத்துள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் பகுதியில் 1100 – 1200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நாட்டின் ஜனநாயகம் குறித்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டார்.
அந்த காலத்து கிராமத்து சபை :
அங்கு கிடைத்த கல்வெட்டில் பழங்காலத்து கிராம சபை கூட்டம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்று இருந்தன. எப்படி ஒரு பேரவை நடத்த வேண்டும், உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது எண்டுறம், ஏன் ஒரு உறுப்பினர் எப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
உலகெங்கும் தமிழர்கள் :
அடுத்ததாக பேசிய அவர், உலகின் மிக பழமையான மொழி தமிழ் மொழி என்பதில், ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து கலிபோர்னியா வரை, மதுரையிலிருந்து மெல்போன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப்டவுன் வரை என எங்கு சென்றாலும் நீங்கள் தமிழர்களை உலகம் முழுக்க காணலாம். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை தமிழர்கள் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்.அதனால் தான் பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட தமிழ் பண்டிகைகள் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது என தமிழ் பற்றி மிகவும் பெருமையாக அவர் பேசினார்.
ஐ.நாவில் தமிழ் பெருமை :
மேலும், பேசிய பிரதமர், தான் கலந்து கொள்ளும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு முறை தமிழர்களை பற்றி பேசி உள்ளதாகவும், ஐ.நா சபையில் தமிழ் மொழி பற்றி குறிப்பிட்டுள்ளதாகவும் தமிழரின் மாண்பு குறித்து தமிழ் திரையுலகம் பல்வேறு படைப்புகளை வழங்கி உள்ளது என்றும் மோடி பேசினார்.
இலங்கையில் வீடு பால் காய்ச்சும் நிகழ்வு :
பிரதமர் மோடி இறுதியாக பேசுகையில், இலங்கை யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான் தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர். நமது அரசு நிறைய செய்துள்ளது நான் யாழ்ப்பாணம் சென்றபோது அங்கு தமிழர்களுக்கு இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த புதிய வீட்டில் பால் காய்ச்சும் பாரம்பரிய சடங்கு நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன் அங்குள்ள தமிழ் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றுக் கொண்டேன். என கூறி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறி பேசி முடித்தார் பிரதமர் மோடி.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…