“மான் கி பாத்” நிகழ்ச்சியில் தமிழில் பேசிய பிரதமர் மோடி..!
மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி “மன் கி பாத்” என்ற நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
அப்போது, பேசிய பிரதமர், தூத்துக்குடியைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி பொன்.மாரியப்பன் என்பவரிடம் பேசும்போது தமிழில் பேசினார். அதில், வணக்கம் நல்லா இருக்கிறீங்களா..? என மோடி கேட்டார். உங்களுக்கு நூலகம் வைக்கும் யோசனை எப்படி வந்தது..? உங்களுக்கு என்ன புத்தகம் பிடிக்கும்? என்றும் அவர் கேட்டார்.
வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் திருக்குறள் படிக்கவேண்டும் என மோடி தெரிவித்தார். பொன் மாரியப்பன் முடித்திருத்தும் நிலையத்திலேயே ஒரு நூலகம் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.