இது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும்! மாநாட்டில் பிரதமர் மோடி உரை!

pm modi

நாட்டின் 75-குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் அகில இந்திய தலைமை அதிகாரிகளின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது, இந்த மாநாடு இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை அடுத்து உடனடியாக நடைபெறுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

குடியரசு தினத்தையொட்டி நமது அரசியலமைப்பு சட்டமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சமயத்தில், அரசியல் நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நாட்டு மக்கள் சார்பாக மரியாதை செலுத்துகிறேன். ஒரு காலத்தில், சபையில் ஒரு உறுப்பினரும் ஒழுங்கை மீறும் போதெல்லாம், அவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த உறுப்பினருக்கு சபையின் மற்ற மூத்த உறுப்பினர்கள் விளக்கமளித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளைச் செய்யக்கூடாது என அறிவுறுத்துவார்கள்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு Z+ பாதுகாப்பு ..!

ஆனால், இன்றைய காலகட்டத்தில் சில அரசியல் கட்சிகள் அப்படிப்பட்ட உறுப்பினர்களுக்கு ஆதரவாக நின்று தங்கள் தவறுகளை காக்க நினைக்கிறது. இந்த நிலை, நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, சட்டசபையாக இருந்தாலும் சரி அனைத்துக்கும் பொருந்தும். இந்த விவாதம் மிகவும் முக்கியமானது. அதுபோன்று மேலும் ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். இதற்கு முன், சபையில் யாரேனும் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானால், அவரிடமிருந்து அனைவரும் ஒதுங்கிக்கொள்வார்கள்.

ஆனால், தற்போது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஊழல்வாதிகள் கூட பகிரங்கமாக போற்றப்படுவதை நாம் பார்க்கிறோம். இது நிர்வாகத்தை அவமதிக்கும் செயலாகும். இது நீதித்துறையை அவமதிக்கும் செயலாகும். மேலும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இந்த மாநாட்டில் இந்த தலைப்பில் விவாதம் மற்றும் உறுதியான ஆலோசனைகள் வழங்குவது எதிர்காலத்திற்கான புதிய பாதைக்கு வழி வகுக்கும்.

இந்த முறை, சட்டமன்றங்களில் பணி கலாச்சாரம் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எனக்கு கூறப்பட்டுள்ளது. நாட்டு மக்கள், ஒவ்வொரு பொதுப் பிரதிநிதியையும் விழிப்புணர்வோடு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்யும் நிலையில், அத்தகைய விவாதங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடந்த ஆண்டுதான் ‘பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு’ நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதுபோன்ற ஆலோசனைகளும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும், இது பெண்கள் அதிகாரமளிக்கும் முயற்சிகளையும் பிரதிநிதித்துவத்தையும் அதிகரிக்கும் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்