தேர்தலுக்கு பின் பாஜக அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்… பிரதமர் மோடி!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது, பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நடைபெற அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பிரதமர் கூறியதாவது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. நாளை நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இது மிகவும் மகத்துவமான கூட்டத்தொடர், கடந்த ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியரசு தின அணிவகுப்பில் மகளிர் சக்தி பறைசாற்றப்பட்டதை நாம் அனைவரும் கண்டோம்.

இது மகளிர் சக்திக்கான அடையாளம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம், ஆனால் இடையூறு செய்வதாக இருக்கக்கூடாது.

குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்.!

ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தக்கூடாது. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவாகிக்கொண்டுதான் இருக்கிறது. சபையில் அமளியில் ஈடுபடுவோரை வரலாறு ஒருபோதும் நினைவில் வைத்திருக்காது.

எனவே, பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், அரசின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்று வருகிறது என்றும் மக்களவை தேர்தலுக்கு பின் பாஜக அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

3 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

4 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

9 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

20 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago