பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

PM Modi francebstil

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் கேம்ரான் அழைப்பை ஏற்று, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்ற பிரதமர் மோடி.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றடைந்தார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் கேம்ரான் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றுள்ளார். பாரிஸ் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். மேலும், பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரிஸில் நாளை நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் ஆண்டுதோறும் ஜூலை 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது, நம் நாட்டில் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவுக்கு இணையானது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதையடுத்து, இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதற்கான ஒப்புதல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்