டுவிட்டரில் 60 மில்லியன் ஃபாலோவேர்ஸை கடந்து 3-வது இடத்திலுள்ள பிரதமர் மோடி.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60 மில்லியனை கடந்துள்ளது.
பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டுவிட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60 மில்லியனை கடந்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 50 மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்ற மோடி அவர்கள், அடுத்த 10 மாதங்களில் கூடுதலாக 10 மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்று, நேற்றைய தினம் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60 மில்லியனை எட்டியுள்ளது.
டுவிட்டரில் அதிகம் பின்தொடரும் இந்தியரில் பிரதமர் மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டுவிட்டரில் அதிகம் பின் தொடரப்பட்ட தலைவர்களின் பட்டியலில், முன்னாள் அமெரிக்கா அதிபரான பராக் ஒபாமா 120.7மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்று முதலிடத்திலும், தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் 83 மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
அந்த வரிசையில் 60 மில்லியன் ஃபாலோவேர்ஸை பெற்று தற்போதும் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும், டுவிட்டரில் அதிகம் பின்தொடரும் கணக்குகளின் பட்டியலில் பிரதமர் மோடி 15 இடத்தில் உள்ளார். குஜராத் முதல்வராக 2009-ல் இருந்த போது பிரதமர் மோடி தொடங்கிய டுவிட்டர் கணக்கு, தனது முக்கியமான கொள்கைகளையும், சமூக ஊடக தளத்தின் மூலம் இதர தலைவர்களையும், பிரபலங்களையும் வாழ்த்தவும் பயன்படுத்தி வருகிறார்.