சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் இந்தியா உலகளாவிய சாதனையை படைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.
குஜராத் மாநிலத்தில் வேளாண்மை, மருத்துவம், சுற்றுலா ஆகிய துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க, அவர்களின் உற்பத்தி செலவு, சிரமங்களை குறைக்க, காலத்திற்கேற்ப அரசு அதிகளவிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.நாட்டில் சூரிய மின்சக்தி திட்டத்தை விவரமான கொள்கைகளுடன், பத்து ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய முதல் மாநிலம் குஜராத் என்றும், இது, கடந்த 2010ம் ஆண்டு பதானில் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின் வினியோக அமைப்பு’ என்பதை உலகிற்கு காட்டுவோம் என்று நினைத்து பார்க்கவில்லை. ஆனால், இன்று சூரிய மின்சக்தி உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இது, கடந்த 6 ஆண்டுகளில், உலகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது என்றார், மேலும், கிசான் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் மூலம் காலை 5 மணி முதல் இரவு 9.30 வரை மின்சாரம் கிடைப்பதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அவர் பேசினார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…